பாதுகாக்க படவேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!
அருகம்புல் பொடி – அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி.
கடுக்காய் பொடி – குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
வில்வம் பொடி – அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
அமுக்கலா பொடி – தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
நெல்லிக்காய் பொடி– பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது
சிறுகுறிஞான் பொடி – சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
நவால் பொடி – சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
வல்லாரை பொடி – நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
தூதுவளை பொடி – நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
துளசி பொடி – மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
ஆவரம்பூ பொடி – இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
கண்டங்கத்திரி பொடி – மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
ரோஜாபூ பொடி– இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
ஓரிதழ் தாமரை பொடி– ஆண்மை குறைபாடு,மலட்டுத்தன்மை நீங்கும்வெ,ள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
ஜாதிக்காய் பொடி – நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
திப்பிலி பொடி– உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
வெந்தய பொடி – வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
நிலவாகை பொடி – மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
நாயுருவி பொடி – உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
கறிவேப்பிலை பொடி – கூந்தல் கருமையாகும், கண்பார்வைக்கும் சிறந்தது.
வேப்பிலை பொடி – குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
திரிபலா பொடி – வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
அதிமதுரம் பொடி – தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
துத்தி இலை பொடி – உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
செம்பருத்திபூ பொடி – அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
கரிசலாங்கண்ணி பொடி – காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
சிறியாநங்கை பொடி – அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
கீழாநெல்லி பொடி – மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
முடக்கத்தான் பொடி – மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது
கோரைகிழங்கு பொடி – தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
குப்பைமேனி பொடி – சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
பொன்னாங்கண்ணி பொடி – உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
முருஙகைவிதை பொடி – ஆண்மை சக்தி கூடும்.
லவங்கபட்டை பொடி – கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
வாதநாராயணன் பொடி – பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
பாகற்காய் பவுட்ர் – குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
வாழைத்தண்டு பொடி – சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
மணத்தக்காளி பொடி – குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
சித்தரத்தை பொடி – சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
பொடுதலை பொடி – பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
சுக்கு பொடி – ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
ஆடாதொடை பொடி – சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
கருஞ்சீரகப்பொடி – சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
வெட்டி வேர் பொடி – நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
வெள்ளருக்கு பொடி – இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
நன்னாரி பொடி – உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
நெருஞ்சில் பொடி – சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
பிரசவ சாமான் பொடி – பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
கஸ்தூரி மஞ்சள் பொடி – தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
பூலாங்கிழங்கு பொடி – குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
வசம்பு பொடி – பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
சோற்று கற்றாலை பொடி – உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
மருதாணி பொடி – கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
கருவேலம்பட்டை பொடி – பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்